1. விண்ணப்பக் கட்டணங்கள்:
    1. எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் தகவலுக்கான கோரிக் கையை மேற்கொள்ளும் எந்தவொரு பிரஜைக்கும் தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவத்தை வழங்குவதற்கு கட்டணம் எதையும் விதித்தலாகாது.
    2. எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் தகவலுக்கான உரிமைக் கோரிக்கையை செயன்முறைப் படுத்துவதற்கு கட்டணம் எதையும் விதித்தலாகாது.
       
  2. தகவல்கள் மற்றும் கட்டணங்கள்:

    தகவலுக்கான கட்டணம் வேறு விதமாக விதித்துரைக்கப்பட்டாலன்றி RTI கோரிக்கை ஒன்றுக்கான பதில் நடவடிக்கையாக பகிரங்க அதிகார சபை ஒன்று தகவலை வழங்குவதற்கு பின்வரும் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

    1. நிழற்படப்பிரதி:
      1. A4 (21 செமீ ஒ 29.7 செமீ) மற்றும் சிறிய அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 2/- (ஒரு பககம்) மற்றும் ரூபா 4/- (இரண்டு பக்கங்களும்)
      2. லீகல் அளவிலான (Legal size) (21.59 செமீ x 35.56 செமீ) மற்றும் A3 (29.7 செமீ ஒ 42 செமீ) அளவு வரையான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 4/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 8/- (இரண்டு பக்கங்களும்)
      3. மேலே தரப்பட்டுள்ள காகிதத்தை விடப் பெரிய அளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள் உண்மையான கிரயத்தில் வழங்கப்படும்.
         
    2. அச்சுப்படிகள் (Printout)
      1. A4 (21 செமீ x செமீ 29.7 )மற்றும் சிறிய அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 4/- (ஒரு பககம் ) மற்றும் ரூபா 8/- இரண்டு பக்கங்களும்
      2. லீகல் அளவிலான (Legal size) (21.59 செமீ x 35.56 செமீ) மற்றும் A3 (29.7 செமீ x 42 செமீ) அளவு வரையான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 5/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 10/- (இரண்டு பக்கங்களும்)
      3. மேலே தரப்பட்டுள்ள காகிதத்தை விடப் பெரிய அளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள் உண்மையான கிரயத்தில் வழங்கப்படும்.
         
    3. கோரிக்கையை விடுக்கும் பிரஜையினால் வழங்கப்படும் Diskette, இறுவட்டு (Compact Disc), USB mass drive அல்லது அவற்றை ஒத்த இலத்திரனியல் சாதனம் ஒன்றில் தகவல்களைப் பிரதியிடுவதற்கு ரூபா. 50/-
       
    4. பகிரங்க அதிகார சபையினால் வழங்கப்படும் Diskette, இறுவட்டு; (Compact Disc), USB mass drive அல்லது அவற்றை ஒத்த இலத்திரனியல் சாதனம் தகவல்களைப் பிரதியிடுவதற்கு உண்மையான கிரயத்துடன் ரூபா. 50/-.
       
    5. ஏதேனும் ஆவணம் அல்லது சாதனத்தை ஆராய்வதற்கு அல்லது நிர்மாணத்தலத்தின் பரிசோதனைக்கு மணித்தியாலம் ஒனறுக்கு ரூபா. 50/- இதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுக்குமாயின், முதல் மணித்தியால ஆய்வுக்கு / பரிசோதனைக்கு கடடணம் விதிக்கப்படாது. இது அத்தகைய பரிசோதனையை முன்னர் கட்டணமின்றி வழங்கிய பகிரங்க அதிகார சபைகளின் நடைமுறைககு பங்கமின்றி இது மேற்கொள்ளப்படுவதுடன் இந்நடைமுறை இந்த உப விதியினால் தடைபெறாது தொடர்ந்தும் நடைமுறைபபடுத்தப்படுதல் வேண்டும்.
       
    6. மாதிரிகள் அல்லது உருப்படிவங்களுக்கு உண்மையான கிரயம் விதிக்கப்படும்.
       
    7. மின்னஞ்சல் ஊடாக வழங்கப்படும் தகவல்களுக்கு கட்டணம் இல்லை.
       
  3. சுற்றறிக்கைகள அல்லது ஒழுங்குவிதிகள் மூலமாக பகிரங்க அதிகாரசபைகளினால் விதித்துரைக்கப் பட்ட அல்லது வழங்கப்பட்ட முன்னைய கட்டண அட்டவணை இருக்குமிடத்து, விதி 4 இல் விதித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் எவ்வாறிருப்பினும் அந்தக் கட்டண அட்டவணை தொடர்ந்தும் தொழிற்பாட்டில் இருத்தல் வேணடும்.
    ஆயின், தற்போதுள்ள கட்டண அட்டவணைகள் தொடர்பான கோரல்களின் ஏதேனும் பிணக்கு கட்டணங்கள் மற்றும் மேனமுறையீடுகள பற்றிய இந்த விதிகளுக்கு இணங்க ஆணைக்குழுவினால் தீர்மானிக்க வேண்டிய மேன்முறையீட்டுக்கான ஒரு விடயப் பொருளாகலாம்.
     
  4. கட்டணமின்றி வழங்கப்படும தகவல்கள்:
    1. மேலே உள்ள விதி 4 இல் உள்ள எதனாலும் தடைப்படாது, ஆறு பக்கங்கள் (A4 அளவு) நிழற்பிரதிகள் அல்லது அசசுப் படிகளில் தயாரிக்கப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்ட தகவல்களை பகிரங்க அதிகார சபை கட்டணம் இன்றி வழங்குதல் வேணடும்.

    2. சாதாரணமாக கட்டணமின்றி கிடைக்கக் கூடியதாகவுள்ள தகவல்கள் தொடர்ந்தும் கட்டணமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

  5. கட்டணம் செலுத்தும் முறை:

    1. இந்த விதிகளில் வேறு எங்கேனும் காணப்படும் எதனாலும் தடைப்படாது பகிரங்க அதிகாரசபை  தகவல்களுக்கு பின்வரும் விதத்தில் கட்டணங்களை சேகரிக்கலாம்.

      1. தகவல் அலுவலருக்கு செலுத்தும் பணமாக

      2. பகிரங்க அதிகார சபையின் கணக்கீட்டு அலுவலருக்கு முகவரியிட்டனுப்பப்படும் வங்கி உண்டியல்;

      3. பகிரங்க அதிகார சபையின் கணக்கீட்டு அலுவலருக்குச் செலுத்தக்கூடியதாக மேற்கொள்ளப்படும் தபால் அலுவலக கொடுபபனவுச் சிட்டை அல்லது தபால் கட்டளை.

    2. தகவல் அலுவலர் கொடுப்பனவு செலுத்தப்படும் விதத்தைப் பொருட்படுத்தாது கட்டணம் ஒன்றின் கொடுப்பனவுக்கு பறறுச்சீட்டு ஒன்றை வழங்குதல் வேண்டும்.

  6. தகவலைப் பெற அணுகுதல்:

    1. பாரிய அளவிலான கோரிக்கைகளுக்கு தகவல் அலுவலர் தகவலைப் பெறுவதற்கான அணுகுதலை வழங்குவதற்கு முன்னர் அணுகுதலை மேற்கொள்ளக்கூடிய பல்வேறு வடிவங்களையும் அவற்றின் கட்டணங்களையும் அவ்வாறே குறிப்புகளை எழுதும் பிரித்தெடுப்புகளைப் பிரதிபண்ணும் வாய்ப்புகளையும் பகிரங்க அதிகார சபையின் தற்றுணிபின் பிரகாரம் தொலைபேசியை அல்லது சிறிய புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்தி சாதனத்தின் நிழறபடத்தைப் பெறுதல் உள்ளடங்கலாக கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜைக்குத் தெரிவித்தல் வேணடும்.

    2. விதிகள் 5 மற்றும் 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளுக்கு விதிவிலக்காக கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜைக்கு சாதனத்துக்கான அணுகுதலை வழங்குவதற்கு முன்னர் விதித்துரைக்கப்பட்ட கட்டணம் முழுமையாகச் செலுத்தப்படுதல் வேணடும்.

  7. முதன்மையான வெளிப்படுத்தல்:

    1. சடடத் தின் பிரிவு 8 ஐப் பின் பற்றி அமைச்சர் களினாலும் சட்டத்தின் பிரிவு 10 ஐப் பின்பற்றி பகிரங்க அதிகார சபைகளாலும் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் கட்டணமின்றி பரிசோதனைக்கு பகிரங்கமாகவும் வலைத் தளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்வதற்கும் இலத்திரனியல் பிரதிகள் அடங்கலாக பிரதிகளும் கிடைக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஆயினும், தகவல் வேண்டுகோளை மேற்கொள்ளும் ஒரு பிரஜைக்கு மேலே உள்ள விதிகளில் விதிததுரைக்கப்பட்ட கட்டணங்களுக்கு இணங்கவும் இருத்தல் வேண்டும்.

    2. கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் ஓர் அமைச்சர், சட்டத்தின் பிரிவு 9 ஐப் பின்பற்றி கருத்திட்டம் தொடர்பான எல்லா சாதனங்களும் பகிரங்கமாகக் கிடைக்கச் செய்தல் வேண்டும். அத்தகைய சாதனம்,கட்டணமின்றி பரிசோதனைக்கு பகிரஙகமாகவும் வலைத்தளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்வதற்கும் இலத்திரனியல் பிரதிகள் அடங்கலாக பிரதிகளும் கிடைக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஆயினும், தகவல் வேண்டுகோளை மேற்கொள்ளும் ஒரு பிரஜைக்கு மேலே உள்ள விதிகளில் விதித்துரைக்கப்பட்ட கட்டணங்களுக்கு இணங்கவும் இருத்தல் வேண்டும்.

  8. கட்டணங்கள் தொடர்பான மேன்முறையீடுகள்:

    1. தகவல் அலுவலரினால் விதிக்கப்பட்ட கட்டணம் தகுந்தவாறு தேவைப்படுத்தப்படும் தொகைக்கு மேன்மிகையானது என கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜை கருதினால், RTI ஒழுங்குவிதிகளில் விதித்துரைக்கப்பட்ட வடிவத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் பிரிவு 231 இன் பிரகாரம் செலுத்தவேண்டிய கட்டணத்தை தகவல் அலுவலர் தெரிவித்ததிலிருந்து பதினான்கு நாட்களுக்குள் அவர் குறித்தளிக்கப்பட்ட அலுவலரிடம் மேன்முறையீட்டை  மேற்கொள்ளலாம்.

    2. குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்தில் கோரிக்கை மேற்கொள்ளும் பிரஜை திருப்தியடையாவிடின், அவர் சட்டத்தின் பிரிவு 32 இலும் அதனுடன் தொடர்பான சம்பந்தப்பட்ட விதிகளிலும் விதித்துரைக்கப்பட்ட மேன்முறையீட்டு நடவடிககைமுறையையும் பின்பற்றி தீர்மானம்; மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்களினுள் ஆணைக்குழுவுக்கு மேனமுறையீடு செய்யலாம்

    3. குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு அத்துடன் அல்லது ஆணைக்குழுவுக்கு மேன்முறையீட்டை மேற்கொள்வதற்கு கட்டணம் ஒனறைச் செலுத்த வேண்டிய தேவை இல்லை. மேன்முறையீட்டுப் படிவங்கள் கட்டணம் இன்றி வழங்கப்படும்.

  9. வெற்றிகரமான மேன்முறையீட்டின் மீதமைவாக கட்டண விதிப்பனவிலிருந்து விலக்களிப்பு:
    தகவல் கோரிக்கை ஒன்றை மேற்கொள்ளும் ஒரு பிரஜை குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு அல்லது ஆணைக்குழுவுக்கு மேன்முறையீட்டை வெற்றிகரமாக மேறகொண்டால், கோரிக்கையை விடுக்கும் பிரஜைகளுக்கு கோரப்பட்ட தகவல் கட்டணமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

  10. கட்டணங்களின் மீளளிப்பு:
    ஆணைக்குழு,சட்டத்தின் பிரிவு 15(எ)இற்கு இணங்க கோரிக்கை ஒன்றை மேற்கொண்ட பிரஜை ஒருவரிடம் விதிக்கப்பட்ட கட்டணத்தை சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் தகவல் வழங்கப்படாதவிடத்து மளளிப்புச் செய்யுமாறு ஆணைக்குழுவைப் பணிக்கலாம்

InternalAudit banner

 


Objectives

To carry out internal audit activities in relation to District Secretariat and Divisional Secretariats according to circulars and guidelines issued by the Department of Management Audit and powers vested in the Interna Audit Division as per F.R 133, and to ensure that the responsibilities of the Chief Accounting Officers are fulfilled as set out in section 38 of the National Audit Act No. 19 of 2018.

Functions of the Division :-

  • Conducting audit inspections in accordance with the annual internal audit plan prepared for the District Secretariat Galle and the 22 Divisional Secretariats under its purview, and submitting reports to the District Secretary.
  • Conducting of District Audit Management Committee.
  • Participation in Divisional Audit Management Committee meetings.
  • Examining whether the internal inspection and control system implemented within the institution to prevent errors and fraud is effective, both in terms of its design and its actual operation.
  • Determining the reliability of accounts and other records, and examining whether the applied accounting practices provide the necessary information to prepare accurate financial statements.
  • Evaluating the quality of performance of staff of the office in carrying out their assigned duties.
  • Examining the extent to which the assets of the organization are protected against all forms of loss or damage.
  • Examining whether the Establishment Code, Financial Regulations, and circulars and other supplementary instructions issued from time to time by the Ministry in charge of the subject of Public Administration and the Treasury are being adhered to.
  • Examining the adequacy of the internal control system used to prevent and detect waste, idle capacity, and over-expenditure.
  • Examining and reporting on the operational activities of the organization.
  • To evaluate the progress of proposals and projects and assess the extent to which their implementation plans and timelines are aligned with the achievement of the intended objectives, as well as to evaluate and review the controls in use.
  • Making internal audit reports under above criteria and sbmitting reports to the National Audit Office , Department of Management Audit and Ministry of Home Affairs.

Last Updated Date : 14-08-2026


Contact Us

Telephone    : 091 2224453

Fax :           : 091 4944819

Email :        : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Head of the department/ section

vacant

 

 

 

இறுதி இற்றைப்படுத்தல் திகதி : 2026-04-28

காலி மாவட்ட செயலகத்துக்குள் ஊழல் மற்றும் நெறி பிறழ்வான நடத்தைகள் தொடர்பான முறையீடுகளை ஏற்றுக்கொள்ளுதல்இ முகாமைத்துவப்படுத்துதல் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் இந்த அலகை ஸ்தாபிப்பதன் நோக்கம் ஆகும்.

 

உங்கள் முறையீடுகள்இ முன்மொழிவுகள் மற்றும் பதிலளிப்புகளை முன்வைப்பதற்காக தொடர்பு கொள்ளுங்கள்..

அலகு தலைவர்
Add Dist Secretary land.jpg

 

திருமதி ஏ.எம்.ஏ.யூ.ஜீ. காரியவசம்

மேலதிக மாவட்ட செயலாளர்

நேர்மை அதிகாரி
Assistant Dist Sec.jpg

 

திரு. டீ.பீ. நலிந்த உதய குமார

உதவி மாவட்டச் செயலாளர் - நேர்மை அதிகாரி

எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்

தொலைபேசி இலக்கம்    : 091 22 34 236

தொலைநகல் இலக்கம்    : 091 22 22 972

Whatsapp No                             : 071 80 26 925

மின்னஞ்சல் முகவரி          : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 

ஜனாதிபதி செயலாளரால்  வெளியிடப்பட்ட  இலக்கம் PS/SB/Circular/2/2025 மற்றும் 2025பெப்ரவரி 18 ஆம் திகதியிட்ட சுற்றறிக்கைக்கு  அமைய காலி மாவட்ட  செயலகத்தில் உள்ளக விவகாரங்கள் அலகு அமைக்கப்பட்டது.

 

"தீர்க்கப்படாத புகாரா? அல்லது லஞ்சம் கோரப்படுகிறதா?"

"உடனடியாகத் தெரிவியுங்கள்"

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

iauGalle

எங்கள் சேவைகள் தொடர்பான விசாரணைகள் அல்லது புகார்களுக்கு, தயவுசெய்து உள்விவகாரப் பிரிவுக்கு அறிவிக்கவும்.

உள் விவகார அலகின் முக்கிய நோக்கங்கள்

ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள உள் விவகாரஅலகுகள் பின்வரும் நோக்கங்களை அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது:-

  1. நிறுவனத்தின் ஊழலைத் தடுத்தலும் ஒருமைப்பாட்டு கலாச்சாரத்தை வளர்த்தலும்.
  2. நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் நிறுவன நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்கள் பொது மக்களுக்கு கிடைக்கப்படுவதை உறுதி செய்தல்.
  3. நிறுவனத்திற்குள் நெறிமுறை ஆளுகையை மேம்படுத்துதல்.
  4. தவறான நடத்தைகளைப் புகாரளிப்பதற்கும், இடித்துரைப்பவர்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கும் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய முறைமையை உருவாக்குதல்.
  5. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (இ.அ.ஊ.சா.பு.ஆ) ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்தல்.
 

உள் விவகார அலகின் பொறுப்புகள் மற்றும் பணிகள்

நிறுவன ஒருமைப்பாட்டின் முக்கிய அம்சங்களை இலக்காகக்கொண்ட செயலூக்கமான, தெளிவான மற்றும் கவனம் செலுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை உறுதிசெய்வதற்கான பின்வரும் பொறுப்புகள் மற்றும் பணிகள் உள் விவகார அலகிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது:-

  1. நிறுவனத்திற்குள் உள்ள அமைப்புரீதியான இடையூறுகளைக் (systemic bottlenecks) கண்டறிவதற்காக தற்போதைய நடைமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை ஆய்வு செய்து செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கேற்றவாறு அவற்றை எளிதாக்கல்.
  2. ஊழல் அபாய மதிப்பீடுகளை (Corruption Risk Assessment)) நடத்துவதன் மூலம் நிறுவனத்தில் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து இலக்கு வைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.
  3. நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும் மூலோபாயங்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் ஒருமைப்பாட்டு செயல் திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தல்.
  4. தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்துடன் நிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை சீரமைப்பதன் மூலம் தேசிய ஊழல் எதிர்ப்பு இலக்குகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதி செய்தல்.
  5. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் உட்பட தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுடன் நிறுவனம் இணங்குவதை மதிப்பிடுவதற்காக வழக்கமான இணக்க மதிப்பாய்வுகளை நடத்துதல் மற்றும் முன்னேற்றம் செய்யவேண்டிய பகுதிகளைக் கண்டறிதல்.
  6. அனைத்து அரச அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சொத்து வெளிப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதிசெய்தல் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விதிமுறைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றிற்கேற்ப நலன் முரண்பாடுகளை நிர்வகித்தல்.
  7. நிறுவனத்தில் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தை தொடர்பான புகார்களைப் பெற்றுக்கொள்ளவும் நிர்வகிக்கவும் பாதுகாப்பான முறைமையை அமைத்தல்; அத்தகைய புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அல்லது அலகுகளால் உடனடியாக கவனிக்கப்படுவதை உறுதி செய்தல்; வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழக்கமான பின்னூட்டல்களை வழங்குதல். தேவைப்பட்டால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு தொடர்புடைய உண்மைகள், கண்டுபிடிப்புகள் அல்லது தகவல்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அனுப்புதல்.
  8. நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளை விபரித்துக் காட்டும் குடிமக்கள் சாசனத்தை உருவாக்கி வெளியிடல்.
  9. அரச அலுவலர்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தரப்படுத்தப்பட்ட நடத்தை விதிக் கோவை உட்பட நெறிமுறையான நிர்வாகத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தல்.
  10. ஊழல் எதிர்ப்பு கொள்கைகள் தொடர்பில் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக பயிற்சியளித்தல் மற்றும் விழிப்புணர்வை உருவாக்கல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல்.
  11. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நேர்மை மதிப்பீட்டு செயல்முறைகளில் நிறுவனம் பங்கேற்பதையும் அதனுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதையும் உறுதி செய்வதுடன் தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டிற்கான நிறுவன மையப் புள்ளியாகச் செயல்படல்.
  12. அலகின் கடமைகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து வழிகாட்டுதல் மற்றும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் தொடர்பைப் பேணுதல்.
  13. உள் விவகார அலகின் செயல்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முன்முயற்சிகளில் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய சுருக்கமான காலமுறை மற்றும் வருடாந்திர அறிக்கைகளை தயாரித்தல்.
  14. ஒருமைப்பாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
 
குழு உறுப்பினர்கள்

1. செலவி. ஜீ. ஜீ. லக்ஷ்மி காந்தி - மேலதிக மாவட்டச் செயலாளர் ( காணி மற்றும் அபிவிருத்தி)

2. திரு. பி. எல். ஏ. குமார - பிரதான கணக்காளர்

3. திருமதி என்.ஜீ.அயி. விஜயரத்ன - பிரதான உள்ளக கணக்காய்வாளர்

4. திருமதி சீ.கே. வீரக்கொடி- மாவட்ட பொறியியலாளர்

5. திரு. பீ. ரசாங்க சூரிஆராச்சி - பணிப்பாளர் திட்டமிடல் (பதி.க.)

6. திருமதி எம்.பீ. தமரா - மாவட்ட விவசாய பணிப்பாளர் 

7. திருமதி. எம். டி. டெக்லா குமாரி - உதவிப் பணிப்பாளர்

8. திரு. கே.கே.வீ.மாதவ துஷார - நிர்வாக உத்தியோகத்தர்

9. திரு. ஜே.என்.சமரசிங்ஹ - சிரேஷ்ட விசாரணை உத்தியோகத்தர்

10. திருமதி கே.பீ.டீ.பிரியதர்ஸனீ - உரித்து மேம்பாட்டு உத்தியோகத்தர்

11. திரு. பீ.ஜீ.நிமல் - உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்

සෞභාග්‍යා නිෂ්පාදන ගම්මාන වැඩසටහන යටතේ කිතුල් ආශ්‍රිත අගය එකතු කළ නිෂ්පාදන ප්‍රවර්ධනය හා කිතුල් වගා ප්‍රවර්ධන ව්‍යාපෘතිය තවලම ප්‍රාදේශීය ලේකම් බල ප්‍රදේශයේ ඇළ ඉහළ ග්‍රාම නිලධාරී වසම ඉලක්ක කර ගනිමින් පසුගියදා (2021.10.09) ආරම්භ කෙරිණ.