காலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி  விழா காலியில்...

காலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இன்று (17.03.2026) காலி தடெல்ல விளையாட்டு மைதானத்தில் காலி மாவட்டச் செயலாளர் கே.யூ. சந்திரலால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சமூக சேவைகள் திணைக்களமும் காலி மாவட்டச் செயலகமும் ஒன்றிணைந்து இவ்விளையாட்டு விழாவை நடத்தின.

அடிப்படை மனித உரிமைகளின் கீழ் மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்குச் சம வாய்ப்புகளை வழங்குதல், அவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் பரா ஒலிம்பிக் போட்டிகள் போலவே , சமூக சேவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் தேசிய மட்டத்திலான தடகள விளையாட்டு விழா வரையும் அவர்களைக் கொண்டு செல்வதற்காக வீரர்களின் திறமைகளை அடையாளம் காணுதல் ஆகியன இவ்விளையாட்டு விழா நடத்துவதன்  நோக்கங்களாகும். 22 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 424 திறமையான பிள்ளைகள் இதில் கலந்துகொண்டதுடன், 87 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

காலி மேலதிக மாவட்டச் செயலாளர் திருமதி அயேஷா காரியவசம், காலி மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி மற்றும் அபிவிருத்தி) செல்வி ஜீ.ஜீ. லக்ஷ்மி காந்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தைக் காலி மாவட்ட சமூக சேவை அதிகாரி திருமதி ரேணுகா களுபஹன உள்ளிட்ட காலி மாவட்டச் செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 13365789101115