பாதகமான கால நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ‘காலு செனெஹச சஹன பவுர’மூலம் பல மாவட்டங்களுக்காக அனுப்பப்பட்ட நன்கொடைகளை அந்த பிரதேச செயலகங்களிடம் வழங்குதல் சென்ற சில நாட்களுக்குள் நடாத்தப்பட்டது.
இதன் தொடக்கம் சென்ற டிசெம்பர் மாதம் 01ஆம் திகதி கண்டி மாவட்டத்தை நோக்கி மானியங்களை கொண்டு செல்வதுடன் ஆரம்பமானது.
அதன் போது ‘காலு செனெஹச சஹன பவுர’ மூலம் சேர்க்கப்பட்ட பொருட்கள் அடங்கிய 62 லொரி வண்டிகள் இன்று (10) காலையில், அனர்;த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு வழங்குவதற்காக 07 பிரதேசங்களை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அனைத்து பொருட்களையும் மிகப் பொறுப்புடன் வெளிப்படத்தன்மையுடன் காலி மாவட்ட செயலாளர் டப்ளியூ.ஏ தர்மசிறி அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் விநியோகிக்கப்பட்டன.
இதுவரை 36 லொரி வண்டிகளை மொத்தமாக கண்டி மாவட்டத்தின் தேவைகளுக்கமைய அனுப்பப்பட்டுள்ளன. 07 லொரி வண்டிகள் நுவரெளியா மாவட்டத்திற்கும் 06 லொரி வண்டிகள் கம்பஹ மாவட்டத்திற்கும் 05 லொரி வண்டிகள் புத்தளம் மாவட்டத்திற்கும் 03 லொரி வண்டிகள் பொலொனருவை மாவட்டத்திற்கும் 01 லொரி வண்டி பதுளை மாவட்டத்திற்கும் 01 லொரி வண்டி அனுராதபுர மாவட்டத்திற்கும் 01 லொரி வண்டி திருகோணமலை மாவட்டத்திற்கும 01 லொரி வண்டி கேகாலை மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
காலி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஒன்றிணைந்து பொது மக்களின் நன்கொடைகளுடன் ஏற்றுக்கொண்ட உலர் உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள், ஒளடதங்கள், குடி நீர் போத்தல்கள், அத்தியாவசிய பொரட்கள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் மக்களுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அதுபோலவே தனியார் நிறுவனங்கள், பலவித அமைப்புகள், தனியார் நன்கொடைகள் மற்றும் போக்குவசரத்து வசதிகளை வழங்குவதில் பல நிறுவனங்களின் தன்னார்வ ஒத்துழைப்பு காலி மாவட்ட செயலகத்திற்கு கிடைத்தன. காலி மாவட்ட செயலகம், அனைத்து பிரதேச செயலகங்கள், இராணுவப் படையினரின் சிரம பங்களிப்பின் கீழ் இச் செயற்பாட்டு நிகழ்ந்தமை விசேடமானதாகும்.






















